Received From #WhatsApp இன்டெர்ஸ்ட்டெல்லர் படத்துக்கு க்றிஸ்டோபர் நோலனுக்கு ஒரு மக்காசோள வயல் தேவைப்பட்டது. கதைப்படி வரண்ட நிலத்தில் ஒரு மிகப்பெரிய மக்காச்சோள வயல் வேண்டும் தயாரிப்பு நிறுவனம் பாரமவுன்ட் "கிராபிக்ஸில் மக்காச்சோள வயலை உருவாக்கிக்கலாம்" என்றது. நோலன் ஒப்புக்கொள்ளவில்லை. அங்கே ஒரு பெரிய சேஸிங் காட்சி இருக்கிறது. ரியலிசம் அவசியம். நிஜமான மக்காசோள வயல்தான் வேண்டும். அதுவும் வரண்டபூமியில், பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி இருக்கணும் என்றார் கனடாவின் ஆல்பர்டா மாநிலத்தில் ஒரு விவசாயியை பிடித்தார்கள். 500 ஹெக்டேர் நிலத்தை வாடகைக்கு எடுத்தார்கள். மக்காசோளத்தை அருகருகே நெருக்கமாக பயிரிட்டு பஞ்சத்தில் அடிபட்ட இமேஜை கொண்டுவந்தார்கள். படம் எடுத்து முடிந்தன்பின் தயாரிப்பு நிர்வாகி புத்திசாலித்தனமாக ஒரு விசயம் செய்தார். அந்த மக்காசோளத்தை அவரே ஆள் வைத்து அறுவடை செய்து விற்றுவிட்டார். நிலத்துக்கான வாடகை அப்படியே அதில் வந்துவிட்டது. தவிர மக்காசோளம் விளைவித்ததை காரணம் காட்டி விவசாயத்துக்கான வரிச்சலுகையும் வாங்கிவிட்டார். இந்த டீலில் கம்பனிக்கு $162,000 (ரூ 1.32 கோடி) லாபம் வந்ததாக கூறப்படுகிறது ஒரு நல்ல புரடக்ஷன் மேனேஜர் எப்படி இருக்கவேண்டும் என்பதை இதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் ஆலிவுட் பட உலகம் நல்லா இருக்கு #பிசினஸ்_பிஸ்தாக்கள்